
இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின் காகுமானு, பவித்ரா, அபி நக்ஷத்ரா, குரேஷி , காளி வெங்கட், அனுபமா குமார் இவர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “பீட்சா 3”.
பீட்சா முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகம் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.. தற்போது மூன்றாம் பாகம் அதே நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
கதைப்படி, நாயகன் அஸ்வின் காகுமானு ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வருகிறார். அதே ரெஸ்டாரண்டில் பணிபுரிந்து வருகின்றனர் காளி வெங்கட், குரேஷி, யோகி.
அந்த ரெஸ்டாரண்டில் ஒரு அமானுஷ்யம் தொடர்ந்து அவர்களை துன்புறுத்தி வருகிறது. அஸ்வின் சந்திக்கும் நபர்களை கொலை செய்தும் வருகிறது அந்த அமானுஷ்யம்.
ஒருகட்டத்தில், அந்த அமானுஷ்யம் யார் என்று தெரிந்து கொள்ள செல்கிறார் அஸ்வின். இறுதியாக அந்த அமானுஷ்யம் யார் என்று தெரிந்து கொண்டாரா.?? அந்த அமானுஷ்யத்திற்கும் அஸ்வினுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதிக் கதை.
எப்போதும் அமைதியாகவே எதையோ இழந்ததை போன்று தனது முக பாவணை வைத்திருக்கிறார் அஸ்வின். ஹீரோவை பழி வாங்க இல்லை என்றாலும், எதற்காக அவரை மிரட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
உடன் பணிபுரிந்த காளிவெங்கட், குரேஷி மற்றும் யோகியை ஏன் இந்த அமானுஷ்யம் தாக்க வேண்டும் என்று படத்திற்குள் நமக்கு பல கேள்வி எழுகிறது.
ஆங்காங்கே சின்ன சின்ன காட்சிகள் மட்டுமே பயமுறுத்துகின்றன… இன்னும் எத்தனை படங்களில் தான் சின்ன பொண்ணு, லிப்ட், அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டி, கேங்க் ரேப், என இதனை சுற்றி நடக்கும் கதைகளை எடுக்கிறீர்கள் என்று தான் கேட்க தோன்றியது.
இசை மற்றும் ஒளிப்பதிவு ஓகே தான் என்றாலும் கதையின் வீரியம் பெரிதளவு இல்லாததால் படத்தின் மீது ஒரு ஈர்ப்பு எழாமல் சென்று விட்டது.
ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு இழுத்துக் கொண்டெ செல்ல தேவையில்லை என்று தோன்றியது..
ஹாரர் படங்களை ரசிக்கும் ரசிகர்களையும் சோதிக்க வைத்துவிட்டது இந்த படம்.
ஆங்காங்கே ஒரு சில காட்சிகளில் பயமுறுத்த வைப்பதால், ஒருமுறை பார்க்கலாம் என்று சொல்லிக் கொள்ளும்படியாக படமாக இப்படம் இருக்கிறது..