Spotlightசினிமா

தெறிக்க விட்ட அஜித் லுக்.. வைரலாகும் புகைப்படம்!

ச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படத்திற்கு பிறகு மீண்டும் ஹச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை போனி கபூர் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கப்படவிருக்கிறது. இதற்காக அஜித் தனது உடலை தயார்படுத்தி வருகிறார்.

அஜித் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக தோன்றவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், க்ளீன் ஷேவ், கெட் அப்பில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button