
நடிகர் தல அஜித் நடிப்பில் மட்டுமல்லாது பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விளையாட்டுகளில் சாதனையாளர்.
சென்னையில் இன்று, 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கமும் வென்றிருக்கிறார் அஜித்குமார்.
4 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று அஜித் சாதனை படைத்துள்ளார்.
வலிமை படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையே சென்னை ரைபிள் கிளப் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அது தொடர்பான படங்கள் இணையங்களில் வெளியாகி வருவதால் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ஏங்கிக்கிடந்த அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.
தற்போது துப்பாக்கி சுடும் பயிற்சி முடிந்து, போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற அஜித்குமாருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களை நிரப்பி வருகிறது.





