Spotlightதமிழ்நாடு

கொரோனா விடுமுறை; கொண்டாட்டத்திற்கு ஊட்டிக்கு சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

ந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த கொடூர தாக்குதலுக்கு தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் பாராமெடிக்கல் கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் ஊட்டிக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர். கார் அவிநாசி அருகே வந்துகொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரி மீது வேகமாக மோதியுள்ளது.

பயங்கர சத்தத்துடன் மோதியதில், இந்த விபத்தில் கார் டிரைவர் உட்பட 5 மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கொரோனா விடுமுறைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button