Spotlightசினிமா

6 பேக் உடற்கட்டுடன் அஜித்; ’வலிமை’ அப்டேட்!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படம் ‘வலிமை’. இப்படத்தினை ஹச் வினோத் இயக்கவிருக்கிறார். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் இப்படம், தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. நேர்கொண்ட பார்வையில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே வலிமை படத்திலும் தொடர இருக்கிறார்கள்.

இந்நிலையில், போனிகபூர் இப்படத்தினை பற்றி கூறும் போது, அஜித், `வலிமை’ படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும், அவர் தயாரானதும், படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இப்படத்திற்காக சிக்ஸ் பேக் உடற்கட்டோடு அஜித் தோன்றவிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button