Spotlightவிளையாட்டு

சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றியை ருசித்த மும்பை!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்தது ஆட்டம் டிரா ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன் எடுத்தது. அடுத்து 6 பந்தில் 9 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா மும்பை அணி 3 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Facebook Comments

Related Articles

Back to top button