நடிகர்கள்: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ்
தயாரிப்பு: கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர் மகேந்திரன்
இசை: ஜிவி பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சி எச் சாய்
இயக்கம்: ராஜ்குமார் பெரியசாமி
கதைப்படி,
வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகூர்த்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் இந்த அமரன்.
சிறுவயதிலிருந்து ராணுவ வீரனாக ஆக வேண்டும் என்பது சிவகார்த்திகேயன் கனவாக இருக்கிறது தந்தை சம்மதித்தாலும் தாய் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார் பின் வளர்ந்த பிறகு ராணுவத்திலும் செய்கிறார் படிப்படியாக உழைத்து மேஜராக பதவி உயர்வு அடைகிறார் அதி பயங்கரவாத தீவிரவாதி ஒருவனே சுட்டும் வீழ்த்துகிறார். இதற்கு பலி வாங்கும் விதமாக தீவிரவாதியின் தம்பி சிவகார்த்திகேயனை பழிவாங்கத் துடிக்கிறார்.
இது ஒரு பக்கம் செல்ல மறுபக்கம் தான் காதலித்த சாய் பல்லவியை வீட்டு பெற்றோரின் சம்மதத்தோடு அவரின் கரம் பிடிக்க ஆசைப்படுகிறார் சிவகார்த்திகேயன்.
சாய் பல்லவியின் பெற்றோர் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருக்க ஒரு கட்டத்தில் அவர்களை சம்மதிக்க வைக்கிறார் சிவகார்த்திகேயன்..
தீவிரவாதிகளின் சதிசெயலில் சிவகார்த்திகேயன் சிக்காமல் தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை…
நாயகன் சிவகார்த்திகேயன் முகுந்து வரதராஜனின் கதாபாத்திரத்தை மிகவும் தத்ரூபமாக ஏற்று நடித்து இருக்கிறார்.
காமெடியில் எப்போதும் அசத்தி நம்மை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இப்பொழுது முழுக்க முழுக்க எமோஷனல் ஆக்ஷன் கலந்த நடிப்பைக் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். இப்படி ஒரு நடிப்பை இவ்வளவு நாளாக எங்கப்பா வைத்திருந்த என்று கூறும் அளவிற்கு தனது நடிப்பின் உச்சத்தை இதில் வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனுக்கு ஈடாக சாய்பல்லவி நடிப்பும் அபாரம் . போர்க்களத்தில் பூத்த பூப்போன்று இவரின் சிரிப்பும் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது.
ஜிவி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்திற்கு மற்றொரு பில்லர் ஆக வந்து நின்றது. ஒவ்வொரு இடத்திலும் ஜிவி பிரகாஷ் குமாரின் இசை கைதட்டல் கொடுக்கும் அளவிற்கு இருந்தது.
சாய் அவர்களின் ஒளிப்பதிவு படத்தினை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்று விட்டது காஷ்மீர் பகுதிகளை காட்சிப்படுத்தியதாக இருக்கட்டும் காதல் காட்சிகளை படமாக்கியதாக இருக்கட்டும் இரண்டையும் கலர்ஃபுல்லாக கொண்டு வந்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
ஒருவரின் வாழ்க்கை வரலாறு எடுக்கும் போது அது சற்று விலகிச் சென்றாலும் அது டாக்குமெண்டரி ஆக வந்து நம்மை சற்று போரடிக்க வைத்து விடும் ஆனால் இந்தக் கதையில் முழுக்க முழுக்க ஒரு வாழ்வியலை கொண்டு வந்து ஒரு இடத்தில் கூட நம்மை சோர்வடைய வைத்துவிடாமல் எனர்ஜியாக திரைக்கதை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.
இந்தியன் என்ற உணர்வை ஒவ்வொரு இடத்திலும் பறைசாற்றி தனது வீரத்தையும் தனது அர்ப்பணிப்பையும் ராணுவ வீரர்கள் எப்படி குடிக்கிறார்கள் என்பதை கண் முன்னே நிறுத்தி இருக்கிறார் இயக்குனர் . அதற்காகவே முதல் சல்யூட் இயக்குனருக்கு
மொத்தத்தில்,
அமரன் – காவியம்