Spotlightசினிமா

”வட சென்னை” ரிலீசுக்கு முன்பாகவே மீண்டும் இணையும் தனுஷ் – வெற்றிமாறன்  கூட்டணி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது ‘வட சென்னை’. படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பேசிய தனுஷ்,

”வெற்றிமாறனுடன் திரும்பவும் இந்த படத்தில் சேர்ந்து நடிப்பதை நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வடசென்னை படம் வெளிவருவதற்கு முன்பாகவே நானும் வெற்றிமாறனும் அடுத்த படத்தின் ஷுட்டிங் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறோம்.

வரும் 17ம் தேதி வடசென்னை படம் ரிலீஸ் ஆகிறது. உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் இருக்கும். படத்தில் அமீர் சார் வேற லெவல நடிச்சிருக்கார். என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உடன் நடித்த ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,மற்றும் அனைவருமே சூப்பரா நடிச்சிருக்காங்க. சந்தோஷ் நாராயணன் பெரிய இசை படத்திற்கு பிளஸ். பாடல் அனைத்தும் அருமையாக உள்ளது .வேல்ராஜ் ராஜ் சார் அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார். இரவு பகல் பாராமல் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button