
காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தில் சோதனை செய்ய வந்த அதிகாரிகளை சோதனை செய்ய விடாமல் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு அமைந்துள்ளது. இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதாவது துறைமுருகன் 24 மணி நேரமும் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை உதவி ஆணையர் விஜய் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் மனோஜ் முரளி சதீஷ் ஆகியோர் சோதனை நடத்த சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
துரைமுருகன் மகன் மீது வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால், துரைமுருகன் வீட்டில் சூழ்ந்திருந்த திமுகவினர் அதிகாரிகளை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Facebook Comments





