Spotlightசினிமா

தேசிய விருதுகளில் முத்திரை பதித்த ‘அமரன்’… 3 தேசிய விருதுகள் வென்ற பெருமை!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில் ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த இப்படத்திற்கு சிறந்த இயக்குநர் (ராஜ்குமார் பெரியசாமி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி. பிரகாஷ் குமார்), சிறந்த படத்தொகுப்பு (ஆர். கலைவாணன்) ஆகிய பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன.

மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர வாழ்க்கையை மையமாகக் கொண்ட இப்படம், அதன் உணர்வுபூர்வமான கதை, தொழில்நுட்பத் தரம் மற்றும் சிறந்த படைப்பிற்காக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த வெற்றி படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்புக்கும், தரமான இந்தியக் கதைகளைச் சொல்லும் முயற்சிக்கும் கிடைத்த பெருமையாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button