Spotlightசினிமா

தேசிய விருதுகளில் அசத்திய ‘கேப்டன் மில்லர்’… தனுஷுக்கு Special Mention, சத்யஜோதி பிலிம்ஸுக்கு இரட்டை பெருமை!

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படம் என்ற தேசிய விருதை வென்றுள்ளது. மேலும், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய தனுஷ், Special Mention தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றி, ஏழு தசாப்தங்களாக தரமான மற்றும் சமூகப் பொறுப்புள்ள திரைப்படங்களை வழங்கி வரும் சத்யஜோதி பிலிம்ஸின் பெருமைமிகு பாரம்பரியத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் தனுஷ், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு ‘கேப்டன் மில்லர்’ படக்குழுவினருக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button