
மறைந்த பழம் பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் தான் அம்சவர்தன். இவர் தமிழில் புன்னகை தேசம் , ஜூனியர் சீனியர் , பிறகு, மந்திரன் போன்ற பல படங்களில் நடித்தவர்.
எப்போதுமே சமூக நலனில் அக்கறை கொண்டவரான இவர், ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
புல்வாமா தாக்குதலில் பலியான தமிழக வீரர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கியது முதல் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது வரை இவரது சேவைகளை பட்டியலில் அடக்கி விட முடியாது.
கொரோனா காலத்திலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களுக்கு தோளோடு தோளாக நின்று வருகிறார்.
இவரின் சமூக சேவையை பாராட்டி HDFC வங்கி நிர்வாகம் வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளது. உங்களின் சேவை பாராட்டுக்குறியது, போற்றுதலுக்குறியது என்று கூறி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளது HDFC நிர்வாகம்.

எந்த உதவியையும் செய்தாலும் அதை விளம்பரப்படுத்தாமல் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர் அம்சவர்தன்.
தற்போது, இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் ’பீட்ரூ’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். கொரோனா முடக்கம் முடிவடையும் பட்சத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


