Spotlightசினிமா

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்.. கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

ட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது ‘தளபது 63’. படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்தினை மிகவும் பிரம்மாண்டமாக ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் மிகவும் முக்கியமான அப்டேட் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சில நிமிட துளிகளுக்கு முன் வெளியிட்டுள்ளார்.

அதில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கும், 2வது லுக் போஸ்டர் 22ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கும் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இதனால் தளபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button