Spotlightசினிமா

மக்களிடையே அமோக வரவேற்பை பெற்ற ‘அனந்தம் மற்றும் கார்மேகம்’ !!

ஜீ5 தளத்தின் சமீபத்திய வெளியீடுகளான ஏப்ரல் 2022 இல் பிரீமியர் செய்யப்பட்ட ‘அனந்தம்’ மற்றும் ‘கார்மேகம்’ வெளியான நாளிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் ப்ரியாவின் அனந்தம் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது, பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினை கொண்டாடி வருகிறார்கள். உண்மையில், எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாகப் இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது.

பிரகாஷ் ராஜ், சம்பத், ஜான் விஜய், சம்யுக்தா, லட்சுமி கோபாலசாமி மற்றும் பிற நடிகர்களின் அட்டகாசமான இதயத்தை கவர்ந்திழுக்கும் நடிப்பு, இந்த ஒரிஜினல் தொடருக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

இத்தொடர் தவிர, ‘கார்மேகம்’ தொடர், ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பு, ரசிகர்களை ஈர்க்கும் உணர்வுப்பூர்வமான கதை, பரபர திரைக்கதை, பிரமாதமான உருவாக்கம் என பல காரணங்களுக்காக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இத்தொடர்களை தொடர்ந்து ஜீ5 தளத்தின் அடுத்த கட்ட புதிய வரவுகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button