
நடிகை நயன்தாரா மற்றும் கவின் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ (Hi) திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ரசகுல்லா’ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. பாடலுடன் வெளியிடப்பட்டுள்ள காணொளியும் சமூக வலைதளங்களில் வேகமாக ட்ரெண்டாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், VTV கணேஷ், சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். எஸ். கண்ணன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளனர். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஃபீல்-குட் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஹாய்’, வரும் ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே வெளியான ‘கன்னக் குழியா’ பாடல் டிஜிட்டல் தளங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘ரசகுல்லா’ பாடலும் அதேபோல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் பாடலின் வரிகளை இயக்குநர் விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். அனிருத் ரவிச்சந்தர் தனது தனித்துவமான குரலில் பாடியுள்ள இந்த மெலோடி பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடன அமைத்துள்ளார்.
ஜென் மார்ட்டின் அமைத்துள்ள இனிமையான மெட்டு, ‘ரசகுல்லா’ என்ற ஈர்க்கும் வரிகள், வண்ணமயமான காட்சியமைப்பு, நயன்தாரா – கவின் இருவரின் அழகிய திரை கெமிஸ்ட்ரி மற்றும் பிருந்தா மாஸ்டரின் நேர்த்தியான நடன வடிவமைப்பு ஆகியவை இணைந்து இந்தப் பாடலை ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம்பிடிக்க வைத்துள்ளன.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், ‘ஹாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.





