Spotlightசினிமா

பிகிலுக்கு பதிலாக ’கைதி’ டிக்கெட் புக் பண்ணிட்டேன்; கலாய்த்த ரசிகரை மூக்குடைத்த தயாரிப்பாளர்!

தீபாவளி தின கொண்டாட்டமாக வரும் வெள்ளியன்று விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி என இரு படங்களும் வெளியாக இருக்கின்றன.

இந்த இரு படங்களும் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விரு படங்களின் டிக்கெட் புக்கிங்களும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகர் ஒருவர், ‘ பிகில் டிக்கெட் புக் செய்வதற்கு பதிலாக கைதி டிக்கெட் புக் செய்து விட்டேன். இப்போது என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.’ என்று நக்கலாக ட்விட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, ‘ தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, ஆனால் அறிவு இல்லையே’ என்று கூறி அந்த ரசிகரை மூக்குடைத்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button