Spotlightசினிமா

இயக்குனர் ஹரியுடன் முதல் படம்; பூஜையுடன் துவங்கப்பட்ட அருண்விஜய்யின் அடுத்த படம்!

டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் அதிக பொருட்செலவில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். பெயர் சூட்டப் படாமல் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

இவர் நடிக்கும் 33 வது படம். இவருக்கு ஜோடியாக இணைகிறார்,ப்ரியா பவானி சங்கர். மேலும் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி,போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ டிவி பிரபலம் புகழ், ராமசந்திர ராஜு, ஐஸ்வர்யா, ஜெயபாலன், ரமா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இதன் படப்பிடிப்பு இன்று (மார்ச்) 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் ஆரம்பமானது. அதை தொடர்ந்து வரும் 16ம் தேதி முதல் பழநியில் படபிடிப்பு தொடரும். மேலும் ராமேஸ்வரம், ராம்நாடு , தூத்துக்குடி, காரைக்குடி மற்றும் சென்னை பகுதிகளை நடைபெறும்.

16வது படமாக சூப்பர் ஹிட் டைரக்டர் ஹரி இப்படத்தை இயக்குகிறார்.

இசை: GV.பிரகாஷ்
ஒளிப்பதிவு: KA.சக்திவேல்
எடிட்டிங்: அந்தோணி
கலை: M.சக்தி வெங்கட் ராஜா
ஸ்டண்ட்: அனல் அரசு
தயாரிப்பு மேற்பார்வை: சின்ன ராஜேந்தர்
பி ஆர் ஓ: ஜான்சன்
CEO: G.அருண்குமார்
நிறுவனம்: டிரம் ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பு: வெடிக்காரன் பட்டி s.சக்திவேல்

Facebook Comments

Related Articles

Back to top button