Spotlightவிமர்சனங்கள்

உச்சகட்டம் விமர்சனம் 2.25/5

அனூப் சிங் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலர்கள். நியூ இயர் கொண்டாட்டத்திற்காக தனியார் விடுதிக்கு செல்கின்றனர். அங்கு, ஒரு நபரை கும்பல் ஒன்று கொலை செய்துவிட, இந்த கொலையை தன்ஷிகா தனது மொபைலில் வீடியோ எடுத்து விடுகிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தன்ஷிகாவை கொலை செய்ய துரத்துகிறார். தன்ஷிகாவை தேடி அனூப் சிங் அலைகிறார். இறுதியாக அந்த ரெளடி கும்பலிடம் இருந்து தன்ஷிகாவை அனூப் சிங் காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

சிங்கம் 3 படத்தில் வில்லனாக நடித்திருந்த அனூப் சிங், இப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கியிருக்கிறார். நல்ல உடற்கட்டோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார் அனூப்.

சாய் தன்ஷிகா, ரெளடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும், கார் டிக்கியில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்.

இரண்டாவது நாயகி தன்யா ஹோப் தனது அழகில் அனைவரையும் கட்டிப்போடுகிறார். நடிப்பிலும் அழகு.

வேதாளம் படத்தின் வில்லன் கபிர் இப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். மிரட்டலான பார்வையால் அனைவரையும் நடுங்க வைக்கிறார்.

சஞ்சய் சௌத்ரி பின்னணி இசை ஓகே ரகம் தான்

பி.ராஜன், விஷ்ணுவர்த்தன் ஒளிப்பதிவில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

பல இடங்களில் லாஜிக் இல்லாமல் கதை நகர்வது படத்தினை இருந்து பார்க்க முடியாத அளவிற்கு அலுப்பை கொடுத்து விடுகிறது.

உச்சகட்டம் – உச்சம் எட்டவில்லை..

Facebook Comments

Related Articles

Back to top button