Spotlightசினிமா

”அடங்க மறு” படத்தின் உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்ட் சத்தியமூர்த்தி!

 

ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடித்துள்ள ”அடங்க மறு”, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க புகழ்பெற்ற படமாக உருவாகி இருக்கிறது. கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V. சத்தியமூர்த்தி இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை கைப்பற்றியுள்ளார்.

இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இதன் மூலம் இப்போது சினிமா வட்டாரத்தில் வர்த்தகர்களின் ஃபேவரைட் படமாக மாறியிருக்கிறது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாளராக பணிபுரிய, சமீபத்திய சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), லால்குடி என் இளையராஜா (கலை), விஜி (வசனம்), ஸ்டன் சிவா (சண்டைப்பயிற்சி), தினேஷ் (நடனம்) மற்றும் ஜே.கவிதா (ஆடை வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.

சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button