Spotlightதமிழ்நாடு

176 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறை; அரசு கவின் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் செய்த செயல்!!

1850-ல் டாக்டர் அலெக்சாண்டர் ஹண்டரால் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பழமையான கலை நிறுவனங்களில் ஒன்று தான் அரசு கவின் கலைக் கல்லூரி. இது ஓவியம், சிற்பக்கலை மற்றும் கலை வடிவமைப்பு சார்ந்த இளங்கலை (BFA) மற்றும் முதுகலை (MFA) படிப்புகளை வழங்குகிறது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூரில் உள்ள இது, நவீன இந்தியக் கலையின் தொட்டில் என்றும் அழைக்கப்படுகிறது.

1928 ல் – திரு.தேவி பிரசாத் ராய் சௌதித்ரி அவர்கள் இணை முதல்வராக கல்லூரி நிர்வாகத்தை ஏற்கிறார். 1929 ல் இந்தியாவின் முதல் முதல்வர் என்கிற பெருமை இவரையே சாரும்.

இந்தக் கல்லூரி கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது மற்றும் 175 ஆண்டுகளுக்கும் மேலாகக் கலைத்துறையில் பல ஓவியக் கலைஞர்களை, சிற்பிகளை,திரைப்பட முன்னனி கலை இயக்குனர்களை, நடிகர்களை, சகலகலா வல்லவர்களை மிகப்பெரிய ஜாம்பவான்களை உருவாக்கிய கல்லூரி என்ற பெருமையை பெறும்.

கடந்த மாதம் பிப்ரவரி 21-02-2026 சனிக்கிழமை அன்று 1997 – 2001 ஆண்டு பயின்ற மாணவர்கள் குழு, கல்லூரி முடித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தங்களுடைய வெள்ளிவிழாவை மிகவும் கோலாகலமாகவும், சத்தம் இல்லாமல், உணர்வுப்பூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Madras School of Arts மெட்ராஸ் கலைப் பள்ளி. என்ற பெயரில் பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கி… பல பெயர்கள் மாற்றப்பட்டிருக்கிறது இன்று அரசு கவின் கலைக்கல்லூரி என்று பெயர் மாறி கம்பீரமாக இருக்கிறது. ஆனாலும் இந்த 176 ஆண்டுகள் வரலாற்றில் இதுபோன்றதொரு அதிக எண்ணிக்கை மாணவர்களோடு, வெள்ளி விழாவை இதற்கு முன் எந்த மாணவர்களும் முன்னெடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வரலாற்றுப் பதிவு என்றே சொல்லலாம்.

இவர்களுக்கு வகுப்பெடுத்த சில பேராசிரியர்கள், வருகைதந்தது, இவர்களை மேலும் உற்சாகப்படுத்தியது.

ஆண்டிற்கு 100 மாணவர்கள் சேர்கை மட்டுமே அனுமதிக்கப்படும். கல்லூரியில், Feb -21st அன்று வெள்ளி விழாவிற்கு (25ஆண்டுகள் கழித்து) கிட்டத்தட்ட 63 முன்னால் மாணவர்கள், வந்திருந்தது பெரும் சாதனை என்றே சொல்லலாம்…

10 மணியிலிருந்து 3 வரை அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சரியாக காலை 9 மணிக்கே நிகழ்ச்சி துவங்கியது. ஒவ்வொரு மாணவர்களாக வரத் தொடங்கினார்கள். வெளியூர்களிலிருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட மாணவர்கள் வந்திருந்தார்கள்.

ஏறக்குறைய 50 வயதுகளை தொட்டிருந்த அவர்கள் குழந்தைகளாகவே மாறி தங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வாக அமைந்தது. தங்கள் வயது தங்களுடைய பொருளாதார அந்தஸ்து சமூக அந்தஸ்து இவை அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர்களைப் போலவே எல்லோரும் மாறி இருந்தார்கள். மதிய உணவு சைவம் அசைவம் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒரே தட்டில் சாப்பிடும் மாணவர்களை கூட காண நேர்ந்தது மிகவும் நெகிழ்ச்சி ஊட்டும் சம்பவமாக இருந்தது.

ஆறு துறையை சார்ந்த மாணவர் குழுக்கள் தனித்தனியாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்கள்.

மேலும் தங்களுடைய சுற்றுலா முதல் தொடர் வண்டி பயணம் நினைவு கூறும் வகையில் சென்னையில் இருந்து கும்பகோணம் என்கிற ஒரு தொடர்வண்டி பெட்டி வடிவமைக்கப்பட்டு இருந்தது அதில் மாணவர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தார்கள்.

இப்படி ஒரு வெள்ளி விழா கொண்டாட்டம் இனிவரும் காலங்களில் நிகழுமா என்பது கேள்விக்குறிதான் ஆனால் இது அந்த கல்லூரி வரலாற்றின் ஒரு மைல்கள்.

Facebook Comments

Related Articles

Back to top button