
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைக்க உருவாகி வெளிவந்த படம் தான் ‘அசுரன்’.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இப்படம் பொதுமக்களாலும் வெகு ஜனங்களாலும் கொண்டாடப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம், மக்களின் ஆரவார வெற்றியால் சுமார் 600 திரையரங்குகளாக விஸ்வரூபம் எடுத்தது.
தொடர்ந்து திரையிடப்படட் அனைத்து திரையரங்குகளிலும் 90% டிக்கெட்டுகள் விற்றுத் தீர்க்கப்படுகின்றன.
இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு குறிப்பிடும்போது, ‘ இது தமிழ் சினிமாவின் உண்மையான வெற்றி. திரையிட்ட இடங்களில் எல்லாம் விஸ்வரூப வெற்றி கொண்டு வருகிறது.’ என்று கூறியுள்ளார்.
Facebook Comments





