Spotlightசினிமா

ஜி வி பிரகாஷின் ’ஐங்கரன்’ படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அதர்வா நடித்து வெளிவந்த ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்ததாக ஜி வி பிரகாஷை வைத்து ஐங்கரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜி வி பிரகாஷின் ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். இப்படத்தை காமன்மேன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கணேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சில தினங்களுக்கு முன் வெளியான நட்புனா என்னானு தெரியுமா என்ற திரைப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button