Spotlightசினிமா

ஹிட் அடித்த ட்ரெய்லர்… ”பேச்சிலர்” படத்திற்காக காத்திருக்கும் இளசுகள்!!

றிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ்குமார் மற்றும் திவ்யாபாரதி நடிக்க உருவாகியுள்ளது “பேச்சிலர்”.

மரகதநாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே உள்ளிட்ட ப்ளாக் பஸ்டர் படங்களின் தயாரிப்பு நிறுவனமான Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு ”பேச்சிலர்” படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட தோன்றியது. இதனைத் தொடர்ந்து வெளியான படத்தின் ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

படத்தின் காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, வசனங்கள் என ஒவ்வொன்றிலும் அவ்வளவு மெனக்கெடலை படக்குழு செய்துள்ளது.

இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும், இப்படத்தை வெளியிடுகிறார் சக்தி ஃபிலீம் பேக்டரி சக்திவேலன். எப்போதுமே தரமான படங்களை மட்டுமே தனது நிறுவனத்தின் மூலம் வெளியிடும் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுவதால், இப்படத்தின் மீது இன்னமும் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நண்பர்களுடன் ஹாஸ்டல் வாழ்க்கையை இப்படம் நினைவுபடுத்துவதால் படத்திற்கு இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

படத்தின் ட்ரெய்லரை யூ-ட்யூப் தளத்தில் இதுவரை சுமார் 28 இலட்சம் பேர் பார்த்து கண்டுகளித்துள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button