
நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உருவாகி வருகிறது “பீஸ்ட்”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
படத்தினை வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி பெரிதும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பாடல் வெளியான சில நாட்களிலே சுமார் 100 மில்லியன் (பத்து கோடி) பார்வைகளை எட்டியுள்ளது இப்பாடல்.
இப்பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்துள்ளது.
அரபிக்குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments