Spotlightசினிமா

சொன்னா புரியாது, தியேட்டருக்கு வா நண்பா… ஹிட் அடித்த ‘ஓ மை கடவுளே’!!

றிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் கடந்த வெள்ளியன்று காதலர் தினத்தில் வெளியான படம் தான் ‘ஓ மை கடவுளே’.

படம் வெளியானது முதல் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. காதலர்கள் மட்டுமல்லாது குடும்பங்களும் பார்க்கும்படியான ஒரு தரமான படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவரும் தெரிவிக்கின்றனர்.

நல்ல விதமான விமர்சனத்தை தொடர்ந்து, இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது படக்குழுவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தில் ஒரு வரும் ஒரு டயலாக், ‘ உனக்கு சொன்னா புரியாது மச்சான்’ மிகவும் பிரபலமடைந்துள்ளதால், அதையே தலைப்பாகவும் வைத்துள்ளோம்… ’இந்த காதலை சொன்னா புரியாது, தியேட்டருக்கு வந்து நீங்களே பாருங்க’

நோட்: தியேட்டருக்கு வந்து பாருங்க..

Facebook Comments

Related Articles

Back to top button