
ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.
பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று பாடல் ஒன்று வெளியானது . ஆர்யா-ராஷிகண்ணா பங்கு பெற்ற இந்த பாடல் நேற்று இந்தியா டிரட்ண்டிங்கில் பரபரப்பானது.
இயக்குநர் சுந்தர்.சி இன் இந்த பிரமாண்ட பாடல் காட்சி u tube 1M ஒன் மில்லியன் பார்வையாளர்களை கண்டது.
அரண்மனை 3 படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.
அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது
ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது





