Spotlightசினிமாவிமர்சனங்கள்

ராயர் பரம்பரை – விமர்சனம் 3/5

றிமுக இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், ஆர் என் ஆர் மனோகர், கிருத்திகா, அனுசுலா, கே ஆர் விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, டைகர் தங்கதுரை உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “ராயர் பரம்பரை”.

கதைப்படி,

காதலர்களுக்கு எதிரான ஒரு சங்கம் இருக்கிறது. அச்சங்கத்திற்கு தலைவராக இருக்கிறார் மொட்டை ராஜேந்திரன். இச்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார் கிருஷ்ணா.

காதலர்களை கண்டால் துரத்தி துரத்தி அடிக்கும் சங்கம் தான் இச்சங்கம். நாயகன் கிருஷ்ணாவை ஒருதலைபட்சமாக காதலித்து பின்னாடியே சுற்றிவருகின்றனர் இரு இளம் கதாநாயகிகள்.

கேங்க் ஒன்றை பார்ம் செய்து கொண்டு லோக்கல் ரவுடியாக வலம் வருகிறார் ஆனந்த்ராஜ். தனது பெண்ணிற்கு (சரண்யா) தான் பார்க்கும் இளைஞனைத் தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து வருகிறார் ஆனந்த்ராஜ். ஆனால், ஜோசியக்காரராக வரும் மனோபாலா, உங்களது பெண்ணிற்கு நிச்சயம் காதல் திருமணம் தான் என்று அடித்துக் கூறுகிறார்.

அதனால், தனது மகளை தனிக்கவனம் கொண்டு வளர்த்து வருகிறார்.

கிருஷ்ணாவும் சரண்யாவும் பார்க்கும் இடங்களிலெல்லாம் எலியும் பூனையுமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர்.

இவர்கள் எப்படி சேர்ந்தார்கள்.? காதலையே பிடிக்காத ஆனந்த்ராஜ் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டாரா.?? ஆனந்த்ராஜ் காதலை வெறுக்க என்ன காரணம்..??? என்பதே படத்தின் மீதிக் கதை.

எந்த வித சீரியஸ் காட்சிகளும் இல்லாமல், எந்த வித கருத்தையும் கூற வராமல் முழுக்க முழுக்க காமெடிக்கென்று எடுக்கப்பட்ட படமாக உருவாகியிருக்கிறது “ராயர் பரம்பரை”..

நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களால் முடிந்த முயற்சியை கொடுத்திருக்கிறார்கள்., காமெடிக்கு சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறது.

நடிகர் கிருஷ்ணா நடனத்தில் நன்றாகவே முன்னேறியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மட்டும் இன்னும் சற்று எஃபர்ட் போட்டிருந்திருக்கலாம்.

மொட்டை ராஜேந்திரனின் ஒரு சில காமெடி மட்டுமே கைகொடுத்திருக்கின்றன. அழகு தேவதையாக வந்து காட்சிகளை அழகூற வைத்திருக்கிறார் சரண்யா.

காமெடிக்கு இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்தால் ராயர் பரம்பரை வசூல் பரம்பரையாக மாறியிருந்திருக்கலாம்.

இருந்தாலும்,

வேற எதுவும் வேண்டாம்பா 2 மணி நேரம் சிரிக்கணும் கலகலப்பா இருக்கணும் என்று எதிர்பார்ப்பவர்கள் “ராயர் பரம்பரை”யை ஒருமுறை விசிட் அடித்துவிட்டு வரலாம்.

ராயர் பரம்பரை – கலகலப்பு…

Produced by Chinnasamy Mounaguru (Chinnasamy Cine Creations)
Written & Directed by Ramanath T
DOP – Vignesh Vasu
Music – Ganesh Ragavendra
Editor – Sasi Kumar
Art – Raghava Kumar
Stunt – Super Subbarayan
Lyricist – Mohan Raja
Choreography – Sandy, Srisiva, Sankar, Sri Selvi
Costume – Rangasamy
Make Up – RK Rama Krishnan
Production Manager – Raghu
Executive Producer – RS Manikandan

Facebook Comments

Related Articles

Back to top button