
இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கேப்டன்”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் இமான்.
படத்தின் ட்ரெய்லர் சில நிமிடங்களுக்கு முன் வெளியானது. இராணுவ வீரராக தோன்றியிருக்கும் ஆர்யாவிற்கு இப்படம் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெய்லர் கொடுத்த வரவேற்பால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழத் துவங்கியிருக்கிறது. வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தினை ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments