வேதமங்களம் கிராமத்தில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு சங்கத்தின் அப்போதைய தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் முறைகேடாக விற்று, அத்தொகையை கையாடல் செய்ததாக காஞ்சிபுரம் எஸ்.பி.யிடம் நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக விஷால் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் மீது, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று காலை நடிகர் சங்க தலைவர் நாசர், காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவில் ஆஜராகி சரத்குமார், ராதாரவி மீதான புகார்களுக்கான ஆதாரம் என்று கூறி சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.
Facebook Comments