
கௌதம் கார்த்திக் நடிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் கடந்த வெள்ளி அன்று திரைக்கு வந்த படம் ”இருட்டு அறையில் முரட்டுக்குத்து”. இப்படம் இளைஞர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆனால், இப்படத்திற்கு திரையுலகத்தினர் மத்தியில் கூட கடும் எதிர்ப்பு இருந்து வருகின்றது. இயக்குனர் இமயம் பாரதிராஜா கூட இப்படத்தை கடுமையாக தாக்கியது அனைவரும் அறிந்ததே.
அதே நேரத்தில் இதுவே படத்திற்கு ப்ரோமோஷனாக 4 நாள் முடிவில் இப்படம் ரூ 5 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாம்.
அது மட்டுமின்றி சென்னையில் மட்டுமே இப்படம் ரூ 1.33 கோடி வசூல் செய்துவிட்டது. இன்னமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாகத்தான் படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது.
Facebook Comments