
ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது உச்சகட்டத்தை எட்டி வருகிறது. பல உயிர்கள் பலியாகி வரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் மாணவ மாணவியர்களை மீட்டுக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் பெரும் முயற்சி எடுத்து அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் சேனலான புதிய தலைமுறை ”சொந்த நாட்டில் படிக்காமல் உக்ரைன் சென்ற மாணவர்களை என் தோளிலா பறந்து கொண்டு வர முடியும்?” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைதளத்தில் கார்ட் ஒன்று பரவி வருகிறது.
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்த மத்திய அமைச்சர் ”
@PTTVOnlineNews @PTTVEnglish @PTFoundation10
இது என்ன?
இது எங்கிருந்து வந்தது?
பொய்!
இப்படி ஒரு கேள்வி-பதில் நிகழவில்லை.
Totally fake! #fake #fakealert ” என்று புதியதலைமுறையை கடிந்துள்ளார்.
இதற்கு பதிலளித்த புதிய தலைமுறை நிர்வாகம் அப்படி வெளியானது பொய்யான செய்தி என்று விளக்கம அளித்துள்ளது.
இது புதிய தலைமுறை வெளியிட்ட கார்ட் அல்ல. Fake news https://t.co/P9Lf2BuHfn
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 27, 2022