
வரும் வெள்ளியன்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, கதிர் மற்றும் ஹாஸ்டல் படங்கள் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில் மே முதல் செப்டம்பர் வரை பல முக்கிய படங்கள் வெளியாக இருக்கிறது.
மே முதல் செப்டம்பர் வரை ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் முக்கிய படங்கள் குறித்த தகவல் இதோ:
மே 5 – ஜிவி பிரகாஷின் ’ஐங்கரன்’
மே 6 – செல்வராகவன், கீர்த்தி சுரேஷின் ‘சாணி காயிதம்’ மற்றும் ஆர்கே சுரேஷின் ’விசித்திரன்’
மே 13 – சிவகார்த்திகேயனின் ’டான்’ மற்றும் சுந்தர் சியின் ‘பட்டாம்பூச்சி’
மே 20 – உதயநிதி மற்றும் அருண்ராஜா காமராஜின் ‘நெஞ்சுக்கு நீதி’
ஜுன் 3 – கமல்ஹாசனின் ‘விக்ரம்’
ஜுன் 17 – ஆர்ஜே பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ மற்றும் அருண்விஜய்யின் ‘யானை’
ஜுன் 24 – விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’
ஜுலை 1 – மாதவனின் ராக்கெட்ரி’ மற்றும் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’
ஜுலை 14 – லிங்குசாமியின் ‘தி வாரியர்’
ஆகஸ்ட் 12 – சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ மற்றும் சமந்தாவின் ‘யசோதா’
செப்டம்பர் 30 – மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன் 1’
மேலும் வரும் தீபாவளியன்று அஜீத்தின் ’அஜித் 61’ படமும், கிறிஸ்துமஸ் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தளபதி விஜய்யின் ’தளபதி 66’ திரைப்படமும் வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல படங்கள் வெளிவர ஆயத்தமாக உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.