
சுசீந்திரன் இயக்கத்தில் அறிமுக நடிகர் விஷ்வா நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள திரைப்படம்தான் ‘சாம்பியன்’.
கால்பந்து விளையாட்டு போட்டியினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் நல்ல ஒரு விமர்சனத்தை பெற்றது.
நல்ல விமர்சனத்தைத் தொடர்ந்து திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதனால், தமிழகம் முழுவதும் இப்படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நல்ல ஒரு பொழுதுபோக்கு படம் எனவும், நிச்சயம் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று கட்டாயம் பார்க்க வேண்டிய படம் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Facebook Comments





