Spotlightவிளையாட்டு

போராடி தோல்வியை தழுவியது சிஎஸ்கே!

2019 ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர்.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக பொல்லார்ட் 41 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணியில் அதிகபட்சமாக சாஹர் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்,.

இதனைத் தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்த சென்னை அணி டூ ப்ளெசிஸ், ரெய்னா, ராய்டு, டோனி என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மறுமுனையில் வாட்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

18 வது ஓவரில் வாட்சன் ஆட்டத்தின்முடிவை மாற்றி மூன்று சிக்சர்களை வானில் பறக்கவிட்டார். இதனால் சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமானது.

எனினும் பரபரப்பான இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுக்கவிருந்த நிலையில் மலிங்கா பந்து வீசினார். 7 ரன்கள் மட்டுமே எடுத்து 1 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வென்றது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக வாட்சன் 80 ரன்கள் எடுத்திருந்தார். மும்பை அணியில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். நான்காவது முறையாக மும்பை அணியை கோப்பை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button