
மீ டூ மூலம் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வெளிப்படுத்தியவர் பாடகி சின்மயி.
அதிலிருந்து பல ரசிகர்கள் இவரிடம் கேட்ககூடாத கேள்விகள் எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.
எதற்கும் அசராமல் அனைவருக்கும் புரியும்படியான ஒரு பதிலை அவர்களுக்கு புரியும் பாணியில் கூறி வருகிறார்.
இந்நிலையில் சின்மயிடம், ரசிகர் ஒருவர் உங்களுடைய நிர்வாண புகைப்படத்தை அனுப்புங்கள் என கூற, அதற்கு மிகவும் நிதானமாக அவர் கேட்டதை அனுப்பி அதிர்ச்சியளித்துள்ளார்.
அதாவது, அவர் கேட்ட நியூட் புகைப்படத்திற்கு பதிலாக, சின்மயி ‘நியூட்’ என்ற மேக்கப் சாதன நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களின் புகைப்படங்களை பதிவு செய்து இவையெல்லாம் என்னுடைய ஃபேவரைட் நியூட் என்று பதிவு செய்துள்ளார்.
இவரின் இந்த வித்தியாசமான பதிலடி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அந்த ரசிகரின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து போட, சமூக வளையதளத்தில் இந்த ரசிகரை கிழி கிழி என பலர் கிழித்து வருகிறார்கள்.
In the meanwhile.. for some entertainment pic.twitter.com/JwarkEaKDz
— Chinmayi Sripaada (@Chinmayi) May 20, 2019





