
இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த இருப்பதாக பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், பல முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஞாயிறு அன்றோடு இந்தியாவின் லாக்-டவுன் முடிவுக்கு வரும் நிலையில், அடுத்தகட்ட லாக்-டவுன் அறிவிக்கப்படுமா இல்லையா என்பது இன்று இரவு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
அதிலும், தமிழகத்தில் விடிவு பிறக்குமா என்று எதிருபார்க்கப்படுகிறது. அதிலும், சென்னையில் ஒரு சில தளர்வுகளோடு லாக்-டவுன் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என நம்பப்படுகிறது.
Facebook Comments




