Spotlightசினிமா

சித்ரா தற்கொலை; கணவர் ஹேம்நாத் கைது!

சில தினங்களுக்கு முன் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த சித்ரா, தனது அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிகாலையில் வெளியான இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக சித்ராவை பதிவுத் திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத்தை கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரித்து வந்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை சித்ரா, திருவான்மியூரில் வீடு கட்டுவதற்கும், சொகுசு கார் வாங்குவதற்கும் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். அதை அடைப்பதற்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்து சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டது. கடன் சுமையோடு குடும்ப செலவுகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தார் சித்ரா. இந்த சூழலில்தான் ஹேம்நாத்துக்கும் சித்ராவுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

ஆனால் குடும்ப செலவுகளை கவனித்து வந்த தனது மகளை ஹேம்நாத்துக்கு திருமணம் செய்து வைக்க சித்ராவின் தாய்க்கு சிறிது தயக்கம் இருந்ததாகவும் எனினும் திருமண ஏற்பாடுகள் பலமாக நடந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதியன்று விடுதி அறையில் இருந்த சித்ராவுக்கும் ஹேம்நாத்துக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஹேம்நாத். இதனால் மனமுடைந்த சித்ரா, நீ இல்லாமல் என்னால் இருக்கமுடியாது என பொருள்படும்படி ஆங்கிலத்தில் I’M SO DEPENDENT ON YOU என தெரிவித்துள்ளார். அவரது காதலை காதிலேயே வாங்காத ஹேம்நாத், ‘நீ செத்துத் தொலை.’ என சண்டையிட்டு விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அவரது மரணத்திற்கு காரணமாக இருந்ததாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் நேற்றிரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Facebook Comments

Related Articles

Back to top button