Spotlightவிமர்சனங்கள்

’கொலைகாரன்’ படபடப்புக்குச் சொந்தக்காரன்- விமர்சனம் 3.5/5

சென்னையில் விஜய் ஆண்டனி – ஆஷிமா இருவரும் எதிர் எதிர் வீட்டில் வசிப்பவர்கள். விஜய் ஆண்டனி ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர். ஆஷிமா மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்.

அதே ஏரியாவில் டிஎஸ்பி-யாக பணிபுரிவர் அர்ஜுன். திடீரென ஒரு நாள் பாதி எரிந்த நிலையில் ஒரு பிணம் அந்த ஏரியாவில் இருந்து கண்டெடுக்கப்படுகிறது. இறந்தது யார் என்று நூல் பிடித்து இந்த வழக்கை விசாரிக்கிறார் அர்ஜுன்.

இந்த கொலை தொடர்பான விசாரணையில் அர்ஜுன் வலையில் ஆஷிமாவும் விஜய் ஆண்டனியும் சிக்குகிறார்கள்.

கொலையான மனிதன் யார் ..? எதற்காக கொலை செய்யப்பட்டார்..?? யார் அந்த கொலைகாரன்..??? என்பதே படத்தின் மீதிக் கதையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி மிகச்சரியான தேர்வு. ஒவ்வொரு பிரேமிலும் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

நான் , சலீம், பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி தனது மிரட்டலான நடிப்பை இப்படத்தில் கொடுத்திருக்கிறார். மீண்டு(ம்) வந்து ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

படத்தின் அடுத்த பலம் நடிகர் அர்ஜுன். வழக்கம்போல் அதிரடியான நடிப்பை கொடுத்திருக்கிறார். போலீஸுக்கே உரித்தான கண் பார்வை மிரட்டலால் அனைவரையும் கட்டிப்போடுகிறார்.

நாயகியாக வரும் ஆஷிமா அழகாக இருக்கிறார். வந்து செல்வது போன்ற காட்சிகள் இல்லாமல், படத்தின் முக்கியமான இடத்தில் முக்கிய கதாபத்திரத்திற்கு உயிரூட்டிருக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் சைமன் கே கிங் பின்னனி இசையில் கதையோடு பின்ன வைத்திருக்கிறார். அதிலும், கொலைகாரனின் தீம் மியூசிக் வேற லெவல்.

பாடல்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், காட்சிகளுக்குள் அவற்றை திணிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தியிருக்கிறது.

படத்தின் முதல் காட்சியிலேயே கதைக்குள் சென்றுவிட்டதால், படத்தின் மீது ஓர் ஈர்ப்பு ஒட்டிக் கொள்கிறது.

அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

படம் பார்க்கும் அனைவரையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்து ஒரு பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸிற்கு ஒரு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

முகேஷின் ஒளிப்பதிவு வெண்டர்புல்.. படத்திற்கு இது ஒரு பலமே..

எடிட்டர் ரிச்சர்ட் கெவினின் கத்திரி சரியான இடத்தை வெட்டி தூக்கி எறிந்திருக்கிறது.

கொலைகாரன் – படபடப்புக்கு சொந்தக்காரன்

Facebook Comments

Related Articles

Back to top button