Spotlightசினிமா

பத்து நாட்கள் கடந்து வீர நடை போடும் “மாமனிதன்”!

தேசிய விருது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாமனிதன்”.

படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல பாராட்டைப் பெற்றது.. தொடர்ந்து குடும்பங்களாக திரையரங்கிற்கு வந்து பொதுமக்களும் பெண்களும் பெரிதாக இந்த படத்தை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

படம் வெளியாகி பத்து நாட்கள் ஆன போதிலும் பல திரையரங்குகளில் இன்னமும் பெண்களின் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.

கடந்த சில நாட்களில் வெளிவந்த படங்களில் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் படமாக மாமனிதன் இருப்பதால், பெண்கள் தங்கள் குடும்பத்துடன் சென்று படத்தை கண்டு வருகின்றனர்.

இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா முதன் முறையாக இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

Related Articles

Back to top button