
ஜோதிகா நடிப்பில் அறிமுக இயக்குனர் கெளதம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ராட்சசி.
R.புதூர் என்ற கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. சுகாதாரமில்லாத பள்ளி, பள்ளி அருகிலேயே சிகரெட் விற்பது, ஒழுக்கமில்லாத மாணவர்கள், பள்ளிக்கு சரிவர வராமல், வகுப்பறைக்கு செல்லாமல் நேரம் கடத்தும் ஆசிரியர்கள் என, வழக்கமாக ஒரு அரசு பள்ளியில் எந்த மாதிரி நடக்குமோ, அந்த மாதிரியான ஒரு பள்ளியாக புதூர் கிராம பள்ளி செயல்பட்டு வருகிறது.
அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் ஜோதிகா. பள்ளியின் நிர்வாகத்தை கையில் எடுத்து பள்ளி சீரமைத்து ஒழுங்கபடுத்துகிறார். அந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர், அங்கு நன்றாக படிக்கும் மாணவ, மாணவியர்களை சூழ்ச்சி செய்து தனியார் பள்ளியில் சேர்த்துவிட்டு விலை போகிறார்.
10 ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக பல மாணவ, மாணவியர்களை 9ஆம் வகுப்பிலே தேர்ச்சி பெற விடாமல், அவர்களை வீட்டிலேயே முடக்கி வைத்தனர் சில ஆசிரியர்கள். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைத்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வைக்க ஜோதிகா சில சட்ட வீதிகளை மீறுகிறார்….
சட்டத்தை மீறிய ஜோதிகாவிற்கு இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
சாட்டை படத்தில் திமிரான துணிச்சலான ஆசிரியராக வருவார் சமுத்திரகனி. அதே துணிச்சல், கம்பீரத்தை இப்படத்தில் பெண் சமுத்திரகனியாக ஜோதிகாவை காணலாம்..
எதற்கும் துணிந்த பெண்ணாக, வசனங்களில் வாள் வீசவும், கைகளில் சிலம்பு சுற்றுவதும் துணிச்சலான பெண்ணாக தோன்றி தனது நடிப்பில் மெருகேற்றியிருக்கிறார் ஜோதிகா. தற்போது அரசு பள்ளிகளில் நடக்கும் அவலங்களையும், ஆசிரியர்களின் கவனக் குறைகளையும் ஆளும் நிர்வாகத்திற்கும் ஆட்சிக்கும் தனது வசனத்தால் வீர அடி கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு அரசு பள்ளியின் நிர்வாகம் எப்படியாக இருக்க வேண்டும், அப்படி இருந்தால் எந்த மாதிரியான நிலைக்கு தமிழகம் மாறும் என்பது வரையான தகவல்களை கொடுத்து புத்திக்கு எட்ட வைத்திருக்கிறார்கள் இயக்குனர்.
தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் சிறப்புகளையும் சொல்லிவிட தவறவில்லை இந்த ‘ராட்சசி’.
ஷான் ரோல்டனின் பாடல்கள் ரகம். பின்னனி இசை படத்தின் கதை ஓட்டத்திற்கு ஈடு கொடுத்துள்ளது.
அரசு நிர்வாகத்திற்கு எதிராக துணிச்சலாக வாள் வீசிய அழகான ‘ராட்சசி’ ஜோதிகாவிற்க்கு வாழ்த்துகள்….
ராட்சசி – துணிச்சல்





