Spotlightசினிமா

கார்த்திக் சுப்புராஜ் & விக்ரம் கூட்டணியின் “மகான்” ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது..!!

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ திரைப்படத்தில் சீயான் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சீயான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 10 முதல் Prime Video -இல் பிரத்தியேகமாக உலகளவில் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

இந்தியாவில் Amazon Prime Video-இன் கன்டென்ட் லைசன்சிங் துறைத் தலைவர் மனிஷ் மெங்கானி கூறுகையில், “Prime Video-இல் வெளிவரவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் நாடகமான மகானின் உலகளாவிய ப்ரீமியரை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மிகவும் திறமையான நட்சத்திரங்கள் பங்கேற்கும் மகான் திரைப்படம் பல திருப்பங்கள் நிறைந்த ஒரு கடினமான பயணத்தில் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு கதை. லலித் குமார் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் இணைந்து இந்த அதிரடி பொழுதுபோக்குச் சித்திரத்தை எங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

“மகான் திரைப்படத்தை Prime Video-இல் வெளியிடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். முழுக்க முழுக்க ஆக்‌ஷன், நாடகம் மற்றும் உணர்ச்சிகளின் கச்சிதமான கலவையை உருவாக்குவதில் கார்த்திக் சுப்பராஜ் ஓர் அற்புதமான பணியைச் செய்துள்ளார். இந்தப் படத்தில் பல திறமையான மற்றும் அற்புதமான நட்சத்திர நடிகர்கள் பங்கேற்றுள்ளனர் மற்றும் எங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் Prime Video-இல் மகான் திரைப்படத்தின் பிரத்யேக உலகளாவிய பிரீமியர் மூலம் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ரசிகர்களைச் சென்றடைய நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”என்று தயாரிப்பாளர் லலித் குமார் கூறினார்.

Facebook Comments

Related Articles

Back to top button