Spotlightசினிமா

வெற்றிமாறனின் “விடுதலை” படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்!

விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள “விடுதலை” திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி, பரபரப்பாக தயாராகி வருகிறது.

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆர் எஸ் இன்போர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை Red Giant Movies நிறுவனம் தமிழ்நாடு வெளியீடு உரிமையை கைப்பற்றியிருக்கிறது.

தமிழகத்தின் தற்போதைய முன்னணி வெளியீட்டு நிறுவனமாக விளங்கி வரும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றியிருப்பது, படத்தின்மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button