Spotlightசினிமா

அம்பேத்குமார் தயாரிப்பில் அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’

லிம்பியா மூவிஸ், அம்பேத்குமார் வழங்கும், ‘ராட்சசி’ படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில், அருள்நிதி- துஷாரா விஜயன் நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது

கவின் -அபர்ணாதாஸ் நடிப்பில் வெற்றியடைந்த ‘டாடா’ படத்தைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில், ‘ராட்சசி’ படப்புகழ் சை கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சார்பட்டா பரம்பரை’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, இராமேஸ்வரம், விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

நடிகர்கள்:  அருள்நிதி , துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த், சரத்லோகிதாஸ்வா, ராஜசிம்மன், ‘யார்’ கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:

இயக்கம்: சை கௌதம ராஜ்,
இசை: டி. இமான்,
பாடல்கள்: யுகபாரதி,
ஒளிப்பதிவு: ஸ்ரீதர்,
படத்தொகுப்பு: நாகூரான்

Facebook Comments

Related Articles

Back to top button