நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உருவாகியுள்ளது ‘கோலமாவு கோகிலா’ படத்தினை வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது.
படத்தினை பற்றி இயக்குனர் நெல்சன் கூறும்போது, “தயாரிப்பு மற்றும் வினியோக துறையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய நிறுவனமாக தங்களை நிரூபித்துள்ளது. ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் எடுக்கும் முயற்சிகள் நம்ப முடியாதவை. மேலும், எந்த வியாபாரத்திலும் வெற்றி பெறும் ரகசியம் ‘சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான விஷயங்களை செய்வது’. லைக்காவிற்கு இவை மிகவும் பொருத்தமானவை. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ், கோலமாவு கோகிலாவை தங்களது சிறப்பான விளம்பர யுக்திகளால் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள். அது படத்துக்கு கூடுதல் மைலேஜாக அமைந்திருக்கிறது” என்றார்.
அனிருத்தின் மாயாஜால இசை படத்தின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவில் ஏற்றி விட்டிருக்கிறது. குறிப்பாக, ‘கபிஸ்கபா’ என்ற விளம்பர ஜிப்பரிஷ் பாடல், படத்தை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது.