
வாலு, ஸ்கெட்ச், போன்ற மாஸ் படங்களை இயக்கிய விஜய் சந்தர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ‘சங்கத்தமிழன்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைப்பில் பாடல்கள் ஹிட் ஆனா ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இப்படம் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக அமையும் என இயக்குனர் விஜய் சந்தர் கூறியிருக்கிறார். படம் முழுக்க முழுக்க ஆக்ஷன், மாஸ் நிறைந்த காட்சிகள் தான் அதிகம் இருக்கின்றன. விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவர் தோன்றும் காட்சிகள் அனைத்தும் எழுந்து நின்று ஆட்டம் போட்டு, விசில் பறக்க வைக்கக் கூடிய வகையில் தான் எடுத்துள்ளோம் என்று கூறுகிறார் இயக்குனர்.
வரும் வெள்ளியன்று இப்படம் உலகம் முழுவதும் மிகவும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.





