Spotlightவிமர்சனங்கள்

காபி வித் காதல் – விமர்சனம் 3.25/5

யக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, திவ்ய தர்ஷினி (dd), சம்யுக்தா, ரெடின் கிங்க்ஸ்லி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் திரைப்படம் தான் காபி வித் காதல்.

காதலை வேறொரு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்று அதில் இருக்கும் சுவாரஸ்யத்தை இயக்குனர் சுந்தர் சி எப்படி விவரித்திருக்கிறார் என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.

கதைப்படி,

ஸ்ரீகாந்த், ஜீவா, திவ்ய தர்ஷினி மற்றும் ஜெய் நால்வரும் உடன் பிறந்தவர்கள். இதில், ஸ்ரீகாந்திற்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. திவ்ய தர்ஷினிக்கு திருமணம் முடிந்து நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்., ஜீவா மற்றும் ஜெய் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

ஜீவா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் ஐஸ்வர்யா தத்தாவும் மூன்று வருடங்கள் “லிவ்விங்” வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

சமையல் கலை படித்துள்ள ஜெய்க்கு ஊட்டியில் பெரிய ரெஸ்டாரண்ட் துவக்க ஆசை. அம்ரிதா, ஜெய் இளம் வயதிலிருந்தே நண்பர்கள். அம்ரிதா ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கிறார். ஆனால், ஜெய்யோ அமிரிதாவுடன் நட்பு பாராட்டி வருகிறார்.

லிவ்விங்க் வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜீவாவை விட்டு பிரிகிறார் ஐஸ்வர்யா தத்தா..

அதே சமயத்தில், ஊட்டியில் தனது ரெஸ்டாரண்டை நடத்த எக்ஸ் மிலிட்டரி ஒருவரின் மகளான மாளவிகாவை திருமணம் செய்ய திட்டமிடுகிறார் ஜெய்.

ஜெய்யின் திட்டம் நிறைவேறியதா.? மாளவிகாவின் காதல் என்னவானது.? ஜீவாவின் வாழ்க்கை எப்படி திசை மாறியது.? இதற்கு நடுவே ஸ்ரீகாந்த் ஆடும் ’லீலை’ ஆட்டத்தின் முடிவு என்ன.? என்பதே படத்தின் மீதி கலகல கதை.

நடிப்பில் அனைவரும் தனி முத்திரையே பதித்திருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் தேர்வு அனைத்தும் ‘நச்’.. கதைக்களம், கதை நகர்வு என ஒவ்வொன்றையும் சுவாரஸ்யமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

எப்போதும் போல கலகல நடிப்பைக் கொடுத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள் ஜீவாவும் ஜெய்யும். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த டிடி’க்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக இருக்கும். கதையின் முக்கிய நகர்வாக டிடி இருக்கிறார்.

படத்தின் நாயகிகளான மாளவிகா சர்மா, அம்ரிதா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா என அனைவரும் கதைக்கான இடத்தை நன்றாகவே நிரப்பியிருக்கிறார்கள். ரைசா ஒரு படி மேலே சென்று இப்படத்தில் பியானோ வாசித்துள்ளார்.

இடைக்கு பஞ்சமில்லா காட்சியை ஒவ்வொரு இடத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். கதை நம்மை சற்று சுழல விட்டாலும் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

யோகிபாபு & ரெடின் காமெடி காட்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைத்திருப்பது சற்று வேதனை தான்.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். காட்சிகள் ஒவ்வொன்றையும் கலர் ஃபுல்லாக கொடுத்து கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும், பின்னணியின் முன்னணி கொடுக்காமல் சென்றது சற்று ஏமாற்றமே.

கதையை தேடி வராதீர்கள், கலகலப்புக்கு நான் கேரண்டி என்ற தனது இயக்கத்தின் முத்திரையை இப்படத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி.

காபி வித் காதல் – பஞ்சமில்லா கலகலப்பு… 

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close