Spotlightவிமர்சனங்கள்

லவ் டுடே – விமர்சனம் 3.5/5

கோமாளி பட இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன், இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் படம் தான் லவ் டுடே. சத்யராஜ், யோகிபாபு, இவானா, ராதிகா சரத்குமார், ரவீனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்..

படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இளைஞர்களின் அதீத வரவேற்பில் நேற்று இப்படம் வெளியாகியிருக்கிறது.

கதைப்படி,

தந்தை இல்லாததால் தாய் ராதிகா சரத்குமாரின் வளர்ப்பில் வளர்கின்றனர் ரவீனாவும் ஹீரோ பிரதீப்பும்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரதீப்பிற்கும் மிகவும் கண்டிப்பான தந்தையாக இருக்கும் சத்யராஜ் மகளான நாயகி இவானாவிற்கும் காதல்.

ரவீனாவிற்கும் யோகிபாபுவிற்கும் திருமண நிச்சயமாகவுள்ள நிலையில், தனது காதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் பிரதீப்.

இவானாவின் தந்தையான சத்யராஜை சந்திக்கச் செல்கிறார் பிரதீப். அப்போது, இவானாவின் செல்போனை பிரதீப்பிடமும், பிரதீப்பின் செல்போனை இவானாவிடம் கொடுத்து ஒருநாள் மட்டும் வைத்திருக்குமாறு கொடுக்கிறார் சத்யராஜ்.

இவானாவின் செல்போனில் இருப்பதை பிரதீப்பும், பிரதீப் செல்போனில் இருப்பதை இவானாவும் பார்த்து விடுகின்றனர்.

அதன்பிறகு நடக்கும் கலகல சம்பவமே இப்படத்தின் மீதிக் கதை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஹீரோ, பாடல்கள் என அனைத்தையும் செய்து ஒன் மேன் ஹீரோவாக களமிறங்கி அடித்திருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

காமெடி, எமோஷன்ஸ், காதல் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றவனாக காட்சிகளில் அதுகளம் செய்திருக்கிறார் துதிப்பிரங்கநாதன் இந்த உடம்புக்குள் இத்தனை விதமான நடிப்பா என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு தனது நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்…

இப்படத்தின் வெற்றி மூலம் பல இளம் நாயகர்களின் தூக்கத்தை நிச்சயம் பிரதீப் ரங்கநாதன் களைத்திருப்பார். தேர்ச்சியான எதார்த்தமான நடிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார் பிரதீப்.

நாச்சியார் படத்திற்கு பிறகு இவானாவிற்கு இரண்டாவது படமாக இப்படம் வெளிவந்திருக்கிறது. தனது அழகான நடிப்பை கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.

நீளமான டயலாக்கை பேசி அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ரவீனா, சத்யராஜ், ராதிகா இவர்களும் நடிப்பும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. படத்திற்கு முக்கியமான தூணாக நின்று அசத்தியிருக்கிறார் யோகி பாபு.

ஹீரோ பிரதீப் யோகிபாபு உடன் பேசும் காட்சிகளாக இருக்கட்டும் மற்றும் ராதிகாவொடு பேசும் காட்சியாக இருக்கட்டும் இந்த இரண்டு காட்சிகளிலும் வசனங்களை மிக அழகாக எழுதி படத்திற்கான ஒரு திருப்புமுனை காட்சியாகவும் கொடுத்து அதை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பிரதீப்..

பாடல்களில் ஆரம்பித்து பின்னணி இசை வரை தனது தனி முத்திரையை பதித்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதுவரை இல்லாத ஒரு தனி ட்ராக்காக இப்படத்தின் இசையை கொடுத்திருக்கிறார் யுவன்.

காதலில் காதலர்களுக்கிடையே நடக்கும் நிகழ்கால சம்பவங்களையும், நண்பர்களுக்குள் நடக்கும் ஜாலியான நிகழ்வுகளையும் கண்முன்னே கொண்டு வந்திருக்கும் படம் தான் லவ் டுடே…

லவ் டுடே – நண்பர்களோடு சென்று வர வேண்டிய ஒரு ஜாலியான ரைட்..

Facebook Comments

Related Articles

Back to top button