
இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மாள்விகா ஷர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் திவ்யதர்சினி ஆகியோரது நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “காஃபி வித் காதல்”.
குஷ்பு, ஏ.சி.எஸ். அருண்குமார் மற்றும் ஏ.சி.சண்முகம் ஆகியோரால் இப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.
டிசம்பர் 9 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படமான இந்த ‘காஃபி வித் காதல்’ ஒரு அருமையான பொழுதுபோக்கு திரைப்படம்.
காதல், பாசம், என்று கலகலப்புக்கு பஞ்சமில்லாத இத்திரைப்படத்தை ஜீ5 தளம் வரும் 9 ஆம் தேதி தனது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.
Facebook Comments