
பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘ஹனு-மேன்’. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
டீசர் இதுவரை சுமார் 50 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அதனுடன் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ‘லைக்ஸு’ம் வழங்கப்பட்டிருக்கிறது.
‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரவ் ஹரி -அனுதீப் தேவ்- கிருஷ்ணா சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
பிரைம் ஷோ எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார்.
விரைவில் ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியிட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.