Spotlightசினிமா

கோலாகலமாக துவங்கியது கலர்ஸ் டிவியின் ‘சிங்கிங் ஸ்டார்ஸ்’!

சென்னை, 13 மார்ச், 2019 : “சிங்கிங் ஸ்டார்ஸ்” இசை இன்னும் இனிமையாய் கொஞ்சம் வித்தியாசமாய் புதுமையும் பிரம்மாண்டமும் நிறைந்து ஒரு நிகழ்ச்சி சிங்கிங் ஸ்டார்ஸ் கலர்ஸ்தமிழில் மார்ச் 16 முதல் துள்ளல் இசை மன்னன் சந்தோஷ் நாராயணன் நடுவராக பங்கேற்க பிரபல பாடகர்கள் சக்திஸ்ரீகோபாலன் மற்றும் தி.அனந்து ஆகியோர் நடுவர் குழுவாக இடம்பெற இரவு எட்டு மணிக்கு உங்கள் இல்லம் தேடி வருகிறது சிங்கிங்ஸ்டார்ஸ் இந்த மேடை ஓர் புதுமை அந்த மேடையிலும் பல புதுமை பாடப்போவது ஒருவர் அல்ல இருவர் ஜோடிகளாக தங்கள் இசைத்திறமையை வெளிப்படுத்தி பாடுவார்கள்.

“தொடங்கப்பட்ட முதல் ஆண்டிற்குள்ளாகவே எங்களது பார்வையாளர்களுடன் ஒரு வலுவான பிணைப்பை கலர்ஸ் தமிழ் உருவாக்கியிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டு என்ற காலஅளவில், தொலைக்காட்சி பார்வையாளர்களோடு ஒரு சிறப்பான பந்தத்தை ஏற்படுத்துவதில் வெற்றி காணச்செய்யுமாறு பலதரப்பட்ட, தரம் வாய்ந்த மற்றும் மெய்மறக்கச் செய்கின்ற சிறப்பான நிகழ்ச்சிகளை நாங்கள் வழங்கி வந்திருக்கின்றோம்” என்று கலர்ஸ் தமிழ் – ன் பிசினஸ் ஹெட் திரு. அனுப் சந்திரசேகரன் கூறினார்.

“சிங்கிங் ஸ்டார்ஸ் என்பது, எங்களின் மற்றுமொரு தனித்துவமான ரியாலிட்டி ஷோவாகும். ஒருவரது பாடுகின்ற திறனை இது வெளிப்படுத்த மேடையமைத்து தருவதோடு, இரண்டு நபர்களின் ஒருங்கிணைந்த உறவின் ஆக்கப்பூர்வ, நேர்மறை தன்மையையும் நேர்த்தியாக வெளிப்படுத்த வகை செய்யும்.

இந்த நிகழ்ச்சி முழுவதிலும் உயர் அளவிலான உணர்ச்சிகள், சக்தி, ஒருங்கிணைப்பின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றல் மற்றும் ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பாடுபவர்கள் மட்டுமன்றி, பார்வையாளர்களும் அனுபவப்பூர்வமாக உணர்வார்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

பிரபல பாடகர்கள் அடங்கிய இந்த சிறப்பான நடுவர்கள் குழுவில், பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களும் இடம்பெறுவது இதன் தனிச்சிறப்பாகும். தமிழ் தொலைக்காட்சி தளத்தில் ஒரு நடுவராக திரைப்பட இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணன் கால்பதிப்பது இதுவே முதல் முறையாகும். புகழ்பெற்ற பின்னணி பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் அனந்து ஆகியோர் இந்த நடுவர் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த புதிய நிகழ்ச்சியின் அறிமுகம் குறித்து பேசிய இசையமைப்பாளர் திரு. சந்தோஷ் நாராயணன், “சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய பாதை படைக்கும் நிகழ்ச்சிக்காக கலர்ஸ் தமிழ் உடன் கைகோர்ப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். தொலைக்காட்சி தளத்தில் முதன் முறையாக கால் பதிப்பதற்கு இது ஒரு துடிப்பான, மகிழ்ச்சியளிக்கும் வழிமுறையாக இருக்கிறது. அழகான விஷயங்களை உருவாக்கவும் மற்றும் வரம்பெல்லைகளை இன்னும் நகர்த்தி விரிவாக்கவும், திறனையும், ஆற்றலையும் ஒருமுகப்படுத்துவதற்கு இசை பலருக்கு உதவுகிறது.

சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற ஒரு புதுமையான நிகழ்ச்சியை உருவாக்கியிருப்பதன் மூலம் இதனை கலர்ஸ் தமிழ் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது. தொலைக்காட்சி தளத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை தொழில்துறையிலும் கூட ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு இது நிச்சயம் வழிவகுக்கும். இந்த பயணத்தில் நாங்கள் வெளிக்கொணர்ந்திருக்கிற திறமைசாலிகளின் இசை திறனானது வியக்கவைக்கிறது. நிகழ்ச்சியின்போது இந்த ஒவ்வொரு ஜோடியும் வெளிப்படுத்திய ஒற்றுமையும், பிணைப்பும் உண்மையிலேயே ஆத்மார்த்தமானதாக இருக்கிறது,” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரபல பாடகர் சக்திஸ்ரீ கோபாலன், “சிங்கிங் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியுடனான எங்களது பயணத்தின் தொடக்கம் புத்துணர்ச்சியூட்டும் ஒரு இனிய அனுபவமாக இதுவரை இருக்கிறது. வெளியே தெரியாமல் மறைந்திருக்கின்ற இந்த மாணிக்கங்களைத் தேடி, தமிழ்நாடு மாநிலம் முழுவதிலும் நாங்கள் பயணித்தோம். ஒருங்கிணைந்து, ஒத்திசைவோட ஜோடியாக அவர்கள் பாடுகின்ற முறையும், அழகும் வியக்க வைக்கிறது.

யஷ் – ஸ்ரீநிதி நடிப்பில் KGF-2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

கன்னட திரையுலகில் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் KGF. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல் பாகம் கன்னட மொழியில் உருவான போதிலும், கன்னட பதிப்பில் வெளியாகும் அதே நாளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

முதல் பாகம் கன்னட ரசிகர் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலக ரசிகர்களையும் பரவலாக கவர்ந்தது. கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை KGF படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இரண்டாவது பாகத்தினை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் உருவாகும் இப்படம் கன்னட, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இன்று பூஜையுடன் துவங்கப்பட்ட படப்பிடிப்பில் பிரசாந்த் நீல், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Facebook Comments

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker